Saturday, December 23, 2006

மௌனம் பேசியதே

"சார் தேங்கா மாங்கா சுண்டல். வாங்கரீங்களா சார்?". ராகவன் சிரித்துக்கொண்டே தலையாட்டி அந்த சிறுவனை போக சொன்னான். மரீனா கடற்கரையில் ஒரு நிமிஷம் இவர்கள் தொல்லை இல்லாமல் காற்று வாங்க முடியாது.ஆனால் சுண்டல், பஜ்ஜி இல்லாத கடற்கரை பற்றி நினைத்து பார்க்கவும் முடியவில்லை அவன் மற்ற கல்லூரி நண்பர்கள் எல்லாரும் கடற்கரை மணலில் விளையாடி கொண்டிருக்கையில் அவன் மட்டும் எதையோ கடலில் பறி கொடுத்த மாதிரி வெறித்து பார்த்து கொண்டிருந்தான்.

கிட்டத்தட்ட நூறு அடி தள்ளி ரம்யா நின்றுகொண்டிருந்தா . அவள் அழகிய கூந்தல் கடற்கரை காற்றில் அடங்காபிடாரியாய் சொன்ன பேச்சு கேட்காமல் ஆடியது. திடீரென்று ராகவனுக்கும் திருவிளாயாடல் படத்தில் வரும் மன்னனை போல் அதே சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அவளிடம் அதை எப்படி கேட்பது? அவன் அதை சொல்லி அவள் அதை புரிந்து கொள்வதற்குள் பல நாட்கள் ஆகிவிடுமோ? அந்த சந்தன கலர் புடவையில் அமைதியாய் கடற்கரை ஓரத்தில் நின்றுகொண்டிருக்கையில் அவள் ஏதோ ரவி வர்மா ஓவியம் போல் காட்சியளித்தாள்.

எத்தேசேயாக அவளும் அவனை பார்த்தாள். இருவரும் புன்னகை பரிமாறி கொண்டனர். அவன் அவளை நோக்கி நடக்க ஆரம்பித்தான் அர்ம்ஸ்றாங் நிலாவில் காலடி எடுத்துவைத்தபோது எப்படி உணர்தானோ தெரியவில்லை ஆனால் அவனுக்கு அவளை நோக்கி வைத்த ஒவ்வொரு அடியும் ஒரு உத்வேகத்தை கொடுத்தது. அவன் அவளை பார்த்தான். சில சமயங்களில் சில உணர்வுகள் சொல்ல வார்த்தைகள் தேவை இல்லை.....கண் பார்வை மட்துமே போதுமானது. அவன் பார்வையாலே கேட்க அவள் பார்வையாலே சம்மதம் சொல்ல ஒரு நொடிக்கு பூமி சூழல்வது நின்றது போல இருந்தது

கை கோர்த்து கொண்டே இருவரும் அந்த காது கேளாதோர் வாய் பேசாதோர் கல்லூரி பெருந்தை நோக்கி நடந்தனர்

28 comments:

G3 said...

Aaha.. kumudhamla varra oru pakka story rangela kalakki irukkeenga.. Super.. Hmm.. naanum thamizhla oru post podanumnu nenaikkaren.. adhukku eppo ketta neramo therila :P

Arunkumar said...

நல்ல கதை மண்டு. ஜி-மூனு சொன்ன மாதிரி குமுதம் ஒரு பக்க கதை மாதிரி நல்ல எழுதியிருக்கீங்க :)

ramya said...

"அவன் அவளை நோக்கி நடக்க ஆரம்பித்தான் அர்ம்ஸ்டறாங் நிலாவில் காலடி எடுத்துவைத்தபோது எப்படி உணர்தானோ தெரியவில்லை ஆனால் அவனுக்கு அவளை நோக்கி வைத்த ஒவ்வொரு அடியும் ஒரு உத்வேகத்தை கொடுத்தது."

very gud try mandu...mandu apdingara perukum unga blogkum sambandham illa, nalla yosichu arumaiya arivali madiri than solirukeenga.

மண்டு said...

@G3
thanks g3
try Quillpad yaar...
School la thamizh padikkadha ennai maadhri aatkal kooda ada easy a use pandrom :-)

@Arun
Nadri nanba

மண்டு said...

@OAU
Mandu ngaaradu en nanbargal enakku vechcha peyar...sila samayam appadi madatanam seyyaradu undu :-)
mandu vukku sumaara aangilamum ezhuda varum
check
Mugamudi.blogspot.com
Chk and do let me know :-)

Porkodi (பொற்கொடி) said...

mandu indhanga poo chendu! engal aadharavu ungaluku eppodhum undu, enga thalaila potradhinga thundu!! :)

Dreamzz said...

//அவன் அவளை பார்த்தான். சில சமயங்களில் சில உணர்வுகள் சொல்ல வார்த்தைகள் தேவை இல்லை.....கண் பார்வை மட்துமே போதுமானது. அவன் பார்வையாலே கேட்க அவள் பார்வையாலே சம்மதம் சொல்ல ஒரு நொடிக்கு பூமி சூழல்வது நின்றது போல இருந்தது//

kutty kadhai super! nalla eludhareenga!

//கிட்டத்தட்ட நூறு அடி தள்ளி ரம்யா நின்றுகொண்டிருந்தாள . அவள் அழகிய கூந்தல் கடற்கரை காற்றில் அடங்காபிடாரியாய் சொன்ன பேச்சு கேட்காமல் ஆடியது.//
ella ramya vum ore madhiri irukaanga?

மண்டு said...

@porkodi
Veerasaamy release aaiduchcha?
TR maadhiri adukku mozhila pesareenga :-)

@Dreamzz
நன்றி
இப்ப தானே வந்திருக்கீங்க
போக போக பாருங்க....

Ponnarasi Kothandaraman said...

Alo... :)
1st time here..
Mandu posts paatha mandu maariye ilaye ;) Pera maathunga ba...Brite'nu veyunga ;)
Kidding..Nice blog..Puthu muyarchi pola irukey.. :) I mean started recntly.. ;) All the best :)

மண்டு said...

@Ponnarasi
hee hee...edho ennala mudinjadu nga
btw...i also torment ppl in english@mugamudi.blogspot.com
:-)

aparnaa said...

ரொம்ப நல்ல கதை!! short and crisp!

Swamy Srinivasan aka Kittu Mama said...

enna beautifulaa ezudhi irukeenga mandu. short story writing is not easy. you have done a gr8 job.

armstrong varigal ellam soober.
title is perfect to your write up.
rombavum rasithaen.

niraya ezutha vaazthukkal. happy new year.

Swamy Srinivasan aka Kittu Mama said...

@பொற்கொடி
lol :)

ramya said...

ohonana..nijamave thangalin aangila blogs super...

மண்டு said...

@Aparna
நன்றி ஜி :-)

@Kittu
ரொம்ப நன்றி நண்பா. அடிக்கடி சந்திப்போம் :-)

@OMU
wow...You made my day :-)

EarthlyTraveler said...

As usual English Novel ezhdhura Joru tamil kadhaiyilum ulladhu.
nadathunga.Well done Harish.
Wish you all the best.Happy New year to you.--SKM

EarthlyTraveler said...

@Dreamzz:
adi vanga poreenga.Careful.:D--SKM

Adiya said...

பார்தேன் பார்தேன்
சுட சுட ரசிதென்

ரொம் super mandu..

ippo ellam intha maathiri mandudhaan supper aa irukainga.. :)

மு.கார்த்திகேயன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே..

இந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.

இந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்

ramya said...

eppadi harish ungalala mattum ippadi mudiyudhu...adutha kalasal thamizh padhivugal poda aasaiyudan edhirparkiren..

Dubukku said...

nice one. kudos.

Happy new year !!

மண்டு said...

@SKM
உங்க உற்சாகம் தான் வேணும் போங்க :-)

@Adiya
நன்றி நண்பரே
அதென்னங்க Adiya
Misspled name or anagram?

மண்டு said...

@Karthi
வணக்கம் நண்பரே
உங்க Commentபடிச்சு மனசு குளிர்நு போச்சு
வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது
மீண்டும் மீண்டும் சந்திப்போம் நண்பா :-)

மண்டு said...

@OMU
aaha...adutta padivu podara time aaiduchchu pola...ok...

@Dubukku
Happy New year nanba..

Dreamzz said...

apparam, ungalukku oru happyand prosperous new year valthukkal!
njy!

G3 said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :-)

Ponnarasi Kothandaraman said...

Oh apdiya..
Paakren :D

Happy new year! :)

மண்டு said...

@Dreamzz
Puttandu vaazhtukkal

@G3
புத்தாண்டு வாழ்த்துக்கள :-)

@Ponnarasi
Kandippa paathu sollunga...