Wednesday, January 3, 2007

தடங்கலுக்கு வருந்துகிறோம்

மண்டு ஒரு பரிட்சார்த்த முயற்சி. தமிழிலும் எழுத முடியுமா னு ஒரு முயற்சி பண்ணனும்னு ஆசை. ஆனா ரெண்டு ப்ளாக் நமக்கு ஆகல சாமி. எங்க பதிவு போட்டேன் யாருக்கு பின்னுடம் போட்டேன் னு கூட ஞாபகம் வெச்சுக் முடியல அதுனால என் தமிழ் சேவைகளை முகமூடி செய்வார்.

அதுனால இங்கே வந்த எல்லா நண்பர்களும் முகமூடிக்கு வந்து உங்க மேலான கருத்துகளை பரிமாற்றம் பண்ணுவீங்க னு நம்பறேன். என்ன அடிக்கடி ஆங்கிலத்துல எழுதி கொஞ்சம் கொடுமை படுத்துவேன் நண்பனுக்காக இத கூட பொறுத்துக்க மாட்டீங்களா என்ன :-)

தமிழ் கொலை தொடரும் ங்கற வாக்குறுதிய நிறைவேற்றும் விதமாக இந்த வருடத்தின் முதல் பதிவு தமிழுல ஆரம்பிச்சிருக்கேன்.

முகமுடியுடன் உங்களை சந்திக்கிறேன். நன்றி :-)

Friday, December 29, 2006

மண்டு

அதென்ன மண்டு? அதுக்கான பதில் தான் இந்த பதிவு. கல்லூரியில் எனக்கு வைக்க பட்ட பட்டப்பெயர் தான் மண்டு.

இந்த கல்லூரி ல வைக்கிற சில பட்ட பெயர் வாழ்க்கை முழுவதும் ஒட்டிக்கும். ஒரு பையனை முதல் வருஷத்துல ஜாக் னு கூப்பிட ஆரம்பிச்சாங்க. இனிக்கும் பாதி பெருக்கு அவன் உண்மை பெயர் தெரியாது. என் நண்பன் வெங்கட்டை முதல் வருஷடுலேருந்து மாப்பிளை னு கூப்பிட ஆரம்பிச்சோம். அன்னைக்கி, இனிக்கி அநேகமா கடைசி வரைக்கும் அவன் மாப்பிளை தான். அதுலயும் உங்க பெயர் கார்த்திக், ரமேஷ், சுரேஷ், கீதா,அனிதா னு இருந்தா பட்ட பெயர் கண்டிப்பா உண்டு.

ஒரு தடவை ஒரு ரமேஷ் வீட்டுலேருந்து
காலேஜுக்கு பொன் பண்ணினான்
"டேய், நான் ரமேஷ் பேசறேன்"
"எந்த ரமேஷ்?"
"சீ நாயே. நான் தாண்டா கொசு பேசறேன்"
இத முதல்லயே சொல்லி இருக்கலாம் :-)

பசங்களுக்கு வெச்சா பரவால. நாம தான் வாத்தியாருக்கும் சேர்த்து பெயர் வைப்போம் இல்லை. எங்க வாத்தியார் ஒருத்தருக்கு கோழி னு பெயர். அந்த பெயர் அநேகமா கல் தோன்றி மண் தோன்றா காலத்தில வெச்சங்க போல. ஒரு தடவை ஒருத்தர் வகுப்பு நடத்தி முடிச்சு என்கிட்ட வந்து "அடுத்தது யாருப்பா" னு கேட்டரு. டக்குனு எனக்கு அவர் உண்மையான பெயர் மறந்து போச்சு. மூட்ஸ் விளம்பரத்துல வர மாடல் மாதிரி நான் "அது வந்து....அது" னு முழிச்சேன. மானம் போச்சு.

ஒரு தடவை ஒரு பையனோட அப்பா அம்மா அவனோட உண்மையான பேரு வெச்சு அவன ஹாஸ்டல்ல தேட வர பசங்களுக்கு அவ பட்ட பேரு மட்டும் தான் தெரியும்ஙகிறதுணால அவங்க கிட்ட இப்படி ஒரு பையனே இங்க படிக்கல னு சத்தியம் பண்ணி அனுப்பிட்டாங்க. அனுபபர பணத்தை பையன் என்ன பண்ணினான் னு அவங்க அப்பாவும், யாருக்கூட ஓடிப்போனான்னு அவன் அம்மாவும் நினைச்சு வாசல் வரைக்கும் மண்டையை உடைச்சூக்கிட்டாங்க.
Moral of the story - பட்ட பேரு இருந்தா அத அம்மா அப்பா கிட்ட சொல்லிடனும். இல்லைனா பிரச்னை தான்.

சரி படிக்கிற காலத்துல தான் சின்னபுள்ளத்தனமா நடந்துகிட்டோம் வேலை பாக்க போற எடதுலயாவுது ஒழுங்க இருக்கலாம் இல்ல? உஹும்ம். Clientக்கு தமிழ் தெரியாது ங்கற தைரியத்துல என்ன ஆட்டம் போடரோம். பக்கத்துல இருக்கும்போதே "போறான் பாரு போண்டா வாயன், அதோ பாரு முண்டககன்ணி" னு அவங்களையும் விட்டு வேக்கிறது இல்ல.

புது வருஷத்துலேருண்தாவுது திருந்துவோமா :-)

பி.கு: புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Saturday, December 23, 2006

மௌனம் பேசியதே

"சார் தேங்கா மாங்கா சுண்டல். வாங்கரீங்களா சார்?". ராகவன் சிரித்துக்கொண்டே தலையாட்டி அந்த சிறுவனை போக சொன்னான். மரீனா கடற்கரையில் ஒரு நிமிஷம் இவர்கள் தொல்லை இல்லாமல் காற்று வாங்க முடியாது.ஆனால் சுண்டல், பஜ்ஜி இல்லாத கடற்கரை பற்றி நினைத்து பார்க்கவும் முடியவில்லை அவன் மற்ற கல்லூரி நண்பர்கள் எல்லாரும் கடற்கரை மணலில் விளையாடி கொண்டிருக்கையில் அவன் மட்டும் எதையோ கடலில் பறி கொடுத்த மாதிரி வெறித்து பார்த்து கொண்டிருந்தான்.

கிட்டத்தட்ட நூறு அடி தள்ளி ரம்யா நின்றுகொண்டிருந்தா . அவள் அழகிய கூந்தல் கடற்கரை காற்றில் அடங்காபிடாரியாய் சொன்ன பேச்சு கேட்காமல் ஆடியது. திடீரென்று ராகவனுக்கும் திருவிளாயாடல் படத்தில் வரும் மன்னனை போல் அதே சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அவளிடம் அதை எப்படி கேட்பது? அவன் அதை சொல்லி அவள் அதை புரிந்து கொள்வதற்குள் பல நாட்கள் ஆகிவிடுமோ? அந்த சந்தன கலர் புடவையில் அமைதியாய் கடற்கரை ஓரத்தில் நின்றுகொண்டிருக்கையில் அவள் ஏதோ ரவி வர்மா ஓவியம் போல் காட்சியளித்தாள்.

எத்தேசேயாக அவளும் அவனை பார்த்தாள். இருவரும் புன்னகை பரிமாறி கொண்டனர். அவன் அவளை நோக்கி நடக்க ஆரம்பித்தான் அர்ம்ஸ்றாங் நிலாவில் காலடி எடுத்துவைத்தபோது எப்படி உணர்தானோ தெரியவில்லை ஆனால் அவனுக்கு அவளை நோக்கி வைத்த ஒவ்வொரு அடியும் ஒரு உத்வேகத்தை கொடுத்தது. அவன் அவளை பார்த்தான். சில சமயங்களில் சில உணர்வுகள் சொல்ல வார்த்தைகள் தேவை இல்லை.....கண் பார்வை மட்துமே போதுமானது. அவன் பார்வையாலே கேட்க அவள் பார்வையாலே சம்மதம் சொல்ல ஒரு நொடிக்கு பூமி சூழல்வது நின்றது போல இருந்தது

கை கோர்த்து கொண்டே இருவரும் அந்த காது கேளாதோர் வாய் பேசாதோர் கல்லூரி பெருந்தை நோக்கி நடந்தனர்

Sunday, December 17, 2006

பார்த்தாலே பரவசம

இந்த புன்னகை என்ன விலை


எத்தனை மானிடர் இந்த பார்வயில் மடிந்தனரோ


யாருக்கு தான் இவள் வழி மேல் அழகிய விழிகள் வைத்து காத்திருக்கிறாள்

கண்களாலே கைது செய்துவிட்டாயே, பிறகு என் காதில் விளங்கு மாட்டி இருக்கிறாய்?

அகர முதல் எழுத்தெல்லாம...

வணக்கம். ஏற்கனவே குத்துயிரும் குலைுயிருமா இருக்கிற தமிழ் மொழியை துன்புறுத்த கிளம்பி இருக்கும் இன்னொரு ஜீவன்.....நான். ஒரு தமிழ் பதிவு ஆரம்பிக்கலாமானு நான் யோசிச்ச அளவுக்கு புஷ் மாமா ஈராக் மேல போர் தொடுக்க கூட யோசிக்கல.

ஆங்கில பதிவே வாரத்துக்கு ஒரு தடவை போடுற சோம்பேறி ஜன்மதுக்கு தமிழ் பதிவு தேவையானு நீங்க கேட்கிறது நியாயம் தான். இந்த லட்சனத்துல தமிழ்ல எழுத்து பிழை வேற நிறைய இருக்கும். நான் என்ன செய்யட்டும்? குஜ்ரத்துல இருந்ததுநால பள்ளிக்கூடத்தில தமிழ் படிக்க முடியாம போச்சு.

நீங்க குமுதம் படிச்சிருக்கீங்களா? அதுல ஆறு வித்தியாசம்னு ஒரு பகுதி வருமே ஞாபகம் இருக்கா? மூனாவூது வகுப்பு படிக்கும்போது எங்க வீட்டுக்கு குமுதம் வரும். பொம்மை பாத்துட்டு அந்த பகுதிக்கு தான் போவேன். ஆறு வித்தியாசம் கண்டுபிடிச்சு என் அப்பா இல்லைனா அம்மா கிட்ட போயி விடை பகுதியை காட்டி நச்சரிப்பேன். என் அம்மா இது தான் சமயம் னு பாத்து "பேசாம நீயே தமிழ் படிச்சுக்கோ" சொல்லிட்டா. அப்புறம் எழுத்துகூட்டி சுஜாதா, ராஜேஷ் குமார் , குமுதம், ஆனந்த விகடனும் படிச்சு தமிழ் ஆர்வத்தை வளர்துக்கிட்டேன்.

என்னதான் திறமையா ஆங்கிலத்துல எழுதினாலும் தாய்மொழி மாதிரி ஏதுலாயும் நாம உணர்வுகளை வெளிப்படுத்த முடியாது. வழக்கம் போல உங்க ஆதர்வும் உங்க உற்சாகமும் தான் இந்த பயணத்துல என்னை வழி நடத்தனும்.

மீண்டும் சந்திப்போம். We will meet....will meet...meet:-)